Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய மாணவன்…. சாவில் இருக்கும் மர்மம்…. போலீஸ் விசாரணை….!!

15 வயதுடைய மாணவன் கரும்பு வயலில் உயிருக்குப் போராடி கொண்டு இருந்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெருமந்தூர் கிராமத்தில் சதாசிவம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் செல்வராஜ் என்பவரின் கரும்பு வயலில் மாணவன் உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார். இதனை அறிந்து வந்த அவரின் தாய் கற்பகவள்ளி கிராம மக்களின் உதவியோடு அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சதாசிவம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவர் எப்படி இறந்தார், அதற்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை. இதனை தொடர்ந்து தாய் கற்பகவல்லி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாணவனின் மர்ம சாவு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |