தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில் கத்தார் அமைச்சர் விஜயம் முதல் வெளிநாட்டு தலைவராக அந்நாட்டுக்கு சென்றுள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலுக்கு கத்தாரின் வெளிவிவகார அமைச்சர் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி சென்றுள்ளார். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் புதிய ஆட்சியில் செயல் பிரதமராக உள்ள முல்லா முகமது ஹசன் அகுந்தை அல் தானி நேரில் சந்தித்து பேசியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் அமைச்சர் அல் தானி முன்னாள் ஜனாதிபதி ஹமித் கர்சாய் உட்பட பல தலைவர்களையும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அன்று சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பிறகு முதன் முறையாக உயர் ஸ்தானீயராக அல் தானி அந்நாட்டுக்கு செல்கிறார்.
இதற்கிடையே அமைச்சர் அல் தானி தலிபான்கள் அரசின் புதிய வெளிவிவகார அமைச்சர், துணை அமைச்சர் ஆகியோரையும் நேரில் சந்தித்து நாட்டின் அரசியல் நிலவரம் மற்றும் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஆதரவாக பல முயற்சிகளை முன்னெடுத்தது குறித்தும் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கத்தார் நிர்வாகம் ஆப்கானிஸ்தானிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தலிபான்களின் முந்தைய ஆட்சியை கத்தார் உட்பட மூன்று நாடுகள் ஆதரித்ததும் குறிப்பிடத்தக்கது ஆகும்.