Categories
உலக செய்திகள்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறங்கிய விமானம்…. 4 பேர் பலியான சோகம்…. விசாரணையில் வெளியான தகவல்கள்….!!

விமானத்தில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக அவசர அவசரமாக அது தரையிறங்கிதையடுத்து 4 பேர் உயிரிழந்துள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சைபீரியாவில் உள்ள இர்குட்ஸ் நகரிலிருந்து எல் -410 என்னும் ஒரு சிறிய ரஷ்ய பயணிகள் விமானம் புறப்பட்டுள்ளது. அதில் 14 பயணிகள் மற்றும் 2 பணியாளர்கள் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் பொழுது தீடிரென அதில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த விமானம் சைபீரியாவில் உள்ள கசசின்கோய் கிராமத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள வனப்பகுதியில் அவசர அவசரமாக தரையிறங்கியதாக விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

அதாவது விமானத்தில் உள்ள முக்கியமான உபகரணங்கள் செயலிழந்துவிட்டதால் விமானம் அவசர அவசரமாக தரையிறங்கியதாக முதற்கட்ட விசாரணையில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் இந்த கோர சம்பவத்தினால் விமானத்தில் பயணித்த பயணிகள் 4 பேர் உயிரிழந்துள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |