விஷாலின் 32-வது படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எனிமி திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதைத் தொடர்ந்து இவர் அறிமுக இயக்குனர் து.பா சரவணன் இயக்கத்தில் வீரமே வாகை சூடும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் நடிகர் விஷாலின் 32-வது படத்தை இயக்குனர் வினோத் குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் சுனைனா கதாநாயகியாக நடிக்கிறார்.
#FirstSchedule of #Vishal32 under @_RanaProduction has been wrapped-up today!!!@dir_vinothkumar @TheSunainaa @actorramanaa @nandaa_actor @balasubramaniem @SamCSmusic @dhilipaction @Ponparthiban @johnsoncinepro @HariKr_official pic.twitter.com/DDGU8N6oel
— Vishal (@VishalKOfficial) September 13, 2021
இந்த படத்தை விஷாலின் நண்பர்கள் ரமணா, நந்தா இருவரும் தங்களது ராணா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கின்றனர். கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.