Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களே… அகவிலைப்படி உயர்வு… விரைவில் வெளியாகப்போகும் அறிவிப்பு…!!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று மத்திய பிரதேச மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகின்றது. கடந்த 2008ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. ஓராண்டில் இந்த ஆட்சி கவிழ்க்கப்பட்டு அரியணை ஏறியது. அடுத்த சட்டமன்ற தேர்தல் வரும் 2023 நடக்க உள்ளது. எஞ்சியிருக்கும் இரண்டு ஆண்டுகள் ஆட்சியில் மக்கள் செல்வாக்கை அதிகப்படுத்த பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சியூட்டும் அறிவிப்பை வெளியிடுவதற்கு அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

அம்மாநிலத்தில் தற்போது உள்ள அரசு ஊழியர்கள் 12 சதவீத அகவிலைப்படியை பெற்று வருகின்றன. இதனால் மேலும் 5 சதவீதம் உயர்த்துவதாக மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்திருந்தார். அதேபோல ஓய்வூதியர்களின் சலுகையும் அதிகரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் பொழுது 7 லட்சம் அரசு ஊழியர்கள் பயன் அடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அரசு ஊழியர்களுக்கு 5 சதவீத அகவிலைப்படியை உயர்த்துவது தொடர்பாக அப்போது இருந்த காங்கிரஸ் முதல்வர் கமல்நாத் அறிவித்திருந்தார்.

அதையடுத்து ஆட்சி கவிழ்க்கப்பட்டு, பாஜக ஆட்சிக்கு வந்த காரணத்தினால் அதனை அதிரடியாக நிறுத்தி வைத்திருந்தனர். இதற்கு பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது அகவிலைப்படி மாநில அரசு ஊழியர்களுக்கு 5 சதவீதம் உயர்த்தப்படும் என்று பாஜக அரசு அறிவித்துள்ளது. அதேசமயம் மத்திய அரசு ஊழியர்கள் 28 சதவீதம் அகவிலைப்படியை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |