Categories
உலக செய்திகள்

3 ஆம் நாடுகளிலிருந்து சென்றால் இது கட்டாயம்…. மீறினால் கடுமையான நடவடிக்கை…. தகவல் வெளியிட்ட சுவிஸ்….!!

சுவிட்சர்லாந்திற்கு பயணம் செய்யும் சுற்றுலாவாசிகள் அந்நாட்டில் தற்போது விதிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா குறித்த விதிமுறைகளை மீறினால் சுவிட்சர்லாந்த் பணத்தில் சுமார் 100 பிராங்குகள் அபராதமாக விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பரவிய கொரோனாவினால் அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்கு கொரோனா குறித்த சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி சுவிட்சர்லாந்து அரசாங்கம் மூன்றாம் நாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு அதிரடியான கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது.

அதாவது ஆசியா உட்பட மூன்றாம் நாடுகளில் தடுப்பூசி பெற்றுக்கொண்டு சுவிட்சர்லாந்து நாட்டிற்கு பயணம் செய்தால் அவர்கள் கட்டாயமாக 3 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா குறித்த பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும் என்பதாகும்.

ஏனெனில் மூன்றாம் நாடுகளில் கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டதற்கான சான்றிதழ் சுவிட்சர்லாந்தில் செல்லுபடியாகாது என்னும் புதிய கட்டுப்பாடு அந்நாட்டில் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதனை மீறும் பயணிகளுக்கு சுவிஸ்லாந்து பணத்தில் சுமார் 100 பிராங்குகள் அபராதமாக விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |