இமயமலை பயணம் நன்றாக இருந்தது என நடிகர் ரஜினிகாந் தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்த நிலையில் அவர் தனது மகளுடன் கடந்த 13ஆம் தேதி 5 நாட்கள் பயணமாக இமயமலைக்குச் சென்றார். அங்கே உள்ள ரிஷிகேஷ் , பத்ரிநாத் , கோதர்நாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற வீடியோ , போட்டோ வெளியாகியது. இந்நிலையில் இமயமலைப் பயணம் முடிந்த ரஜினிகாந்த் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தபோது இமயமலை பயணம் நன்றாக இருந்தது என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.