Categories
தேசிய செய்திகள்

நல்லாதான் இருந்தாங்க…. திடீர்னு இப்படி ஆயிடுச்சு… ஒரே நேரத்தில் 130 குழந்தைகள்… மருத்துவமனையில் அனுமதி…!!!

மேற்கு வங்க மாநிலத்தில் ஜல்பைகுரி என்ற மாவட்டத்தில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு என்று பாதிப்புடன் 130 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி என்ற மாவட்டத்தில் திடீரென்று குழந்தைகளுக்கு காய்ச்சல் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டது. இதனால் 130 குழந்தைகள் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு குழந்தைகளின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக, மேல்சிகிச்சைக்காக மேல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே கொரோன 3ம் அலை குழந்தைகளுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்து நிலையில், ஜல்பைகுரி மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு என்ற பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் அவசியம் ஏற்படும் பட்சத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |