பட்டப்பகலில் தடுப்பூசி செலுத்தச் சென்ற பெண்ணிடம் மர்ம நபர் நகையை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள திருவாக்கவுண்டனூர் பகுதியில் ஹேமாவதி என்பவர் வசித்து வருகின்றார். இவர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காக சுப்பிரமணியநகரில் நடந்த சிறப்பு முகாமிற்கு காரில் சென்றுள்ளார். இதனையடுத்து அங்குள்ள தனியார் பள்ளியில் ஹேமாவதி தடுப்பூசி செலுத்திக்கொண்டு பின் வீட்டிற்கு போகுவதற்காக தனது காரில் ஏறுவதற்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு ஹெல்மெட் அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஹேமாவதி கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து சென்று விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த ஹேமாவதியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருப்பவர்கள் ஓடி வந்து பார்ப்பதற்குள் திருடன் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டான். இதுகுறித்து ஹேமாவதி கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.