பொறியாளர் வீட்டில் பீரோவில் இருந்த தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வீரராகவபுரம் தெருவில் கார்த்திக் என்பவர் வசித்து வருகின்றார். இவர் பொறியாளராக இருக்கின்றார். இவர் கடந்த 10-ஆம் தேதி தனது பெற்றோரை பார்ப்பதற்காக குடும்பத்தினருடன் பாளையங்கோட்டைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து கார்த்திக் மீண்டும் அங்கிருந்து தனது வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த கார்த்திக் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த தங்க காசு, சங்கிலி, கம்மல், மோதிரம் போன்ற 5 1/4 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு 80 ஆயிரம் ரூபாய் இருக்கும் என தெரிகின்றது. இதுகுறித்து கார்த்திக் கொடுத்த புகாரின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்மோகன்காந்தி வழக்குப்பதிவு செய்து நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.