ஆப்கானிஸ்தானில் ஊடகவியலாளர்கள் உட்பட அபாயத்திலிருக்கும் சுமார் 2,000 நபர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழையலாம் என்று ஜெர்மனி தகவல் வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்களிடமிருந்து தங்கள் நாட்டு மக்களை மீட்பதற்காக அனைத்து நாடுகளும் தீவிர முயற்சிகளை எடுத்து பலரையும் அங்கிருந்து மீட்டுள்ளது. இதனையடுத்து ஊடகத்தில் வேலை செய்பவர்கள் உட்பட சுமார் 2,000 பேர் தலிபான் பயங்கரவாதிகளால் தாக்கப்படும் அபாயத்திலுள்ளார்கள்.
இந்நிலையில் தலிபான்களால் தாக்கப்படும் அபாயத்திலுள்ள அந்த 2,000 பேரும் தங்கள் நாட்டிற்குள் நுழையலாம் என்று ஜெர்மன் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் ஆப்கன் நாட்டில் எஞ்சியுள்ள தங்கள் நாட்டு மக்களை மீட்பதற்காக அவர்களுடன் நேரடியாக பேசிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.