தீக்காயமடைந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் தேரடி தெருவில் செல்லப்பா என்பவர் வசித்து வந்தார். இவர் தொழிலாளியாக இருந்தார். இவருக்கு வீரமனோகரி என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் இருக்கின்றனர். இதில் செல்லப்பாவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் செல்லப்பா கடந்த 11ஆம் தேதி அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு குப்பைத் தொட்டி அருகில் விழுந்து படுகாயமடைந்தார்.
மேலும் செல்லப்பா போதையில் பீடி பற்ற வைத்தால் அதில் உள்ள கங்குகள் குப்பையில் பட்டு தீப்பற்றி எரிந்து செல்லப்பா மீது பட்டதால் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து அருகில் இருப்பவர்கள் செல்லப்பாவை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன்பின் செல்லப்பா மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி செல்லப்பா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.