சர்க்கரை பாரம் ஏற்றிசென்ற மின்வேன் கவிழ்த்து விபத்தடைந்ததால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள காவிரி ஆறு பகுதியில் இரட்டை மேம்பாலங்கள் உள்ளன. இந்நிலையில் கரூர் மாவட்டம் குளித்தலையில் இருந்து மினிவேன் ஒன்று சர்க்கரை பாரம் ஏற்றிக்கொண்டு நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளது. இந்த வேனை குளித்தலை பகுதியில் உள்ள பெரியார் நகரில் வசிக்கும் ஈஸ்வரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதனையடுத்து மினி வேன் காவிரி ஆறு இரட்டை பாலம் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்துள்ளது.
இதில் அதிஷ்டவசமாக டிரைவர் ஈஸ்வரன் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற காவல்துறையினர் கிரேனின் உதவியுடன் சாலையில் கவிந்து கிடந்த வேனை மீட்டுள்ளனர். இதற்கிடையே அப்பகுதியில் பேரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் காவல்துறையினர் 1 மணி நேரம் போராடி போக்குவரத்து நெரிசலை சீரமைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.