Categories
சினிமா தமிழ் சினிமா

‘நாங்க வேற மாரி’ பாடல் செய்த மாஸ் சாதனை… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!!

வலிமை படத்தின் முதல் பாடலான நாங்க வேற மாரி பாடல் யூடியூபில் 25 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது .

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் கடைசியாக நேர்கொண்ட பார்வை படம் வெளியாகியிருந்தது. தற்போது இவர் நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, கார்த்திகேயா, குக் வித் கோமாளி புகழ், சுமித்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடலான ‘நாங்க வேற மாரி’ பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் நாங்க வேற மாரி பாடல் யூடியூபில் 25 மில்லியன் பார்வையாளர்களை பெற்று அசத்தல் சாதனை படைத்துள்ளது. இதனை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Categories

Tech |