Categories
தேசிய செய்திகள்

யாரு இப்படி பண்ணாங்கன்னு தெரியல… இரும்பு கம்பியால் தாக்கி… மர்மநபர்களால் விவசாயிக்கு நேர்ந்த கொடுமை…!!!!

ராமநகர் அருகே மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் விவசாயி ஒருவரை தாக்கியதில் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநகர் மாவட்டம், மாகடி தாலுகா கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சேகவுடா. இவரது மனைவி கவுரம்மா. நஞ்சேகவுடா விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமாக ஒரு விவசாயத் தோட்டம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, அவர் தோட்டத்திற்கு சென்று வேலை பார்த்துவிட்டு வீடு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த கும்பல் அவருடன் சண்டை போட்டுள்ளனர். பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் விவசாயியை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதில் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த விவசாயியை மீட்டு அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் நஞ்சேகவுடாவுக்கு சொந்தமான நிலம் தொடர்பாக அவருக்கும், வேறு ஒருவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது தெரிய வந்தது.

இந்த நிலப் பிரச்சனை காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் நேற்று முன்தினம் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியில், விவசாயிக்கும், சில வாலிபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதன் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |