மருத்துவர் பரிந்துரை சீட்டு இன்றி மருந்துகள் வழங்கப்படுகிறதா என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதிகளில் உள்ள தனியார் மருந்து கடைகளில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி தலைமையில் மருத்துவர் கவுதம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன் மற்றும் குடும்பநல மேற்பார்வையாளர் பெரியசாமி போன்றோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மருத்துவர் பரிந்துரை சீட்டு இன்றி மருந்துகள் வழங்கப்படுகிறதா என்பதையும், தாய்-சேய் நலத்தைப் பாதுகாக்கும் வகையில் சட்டத்திற்கு புறம்பாக கருக்கலைப்பு மாத்திரைகள் கொடுக்கப்படுகிறதா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் அவ்வாறு மருத்துவரின் பரிந்துரையின்றி எந்த ஒரு மருந்து, மாத்திரைகளும் வழங்கக் கூடாது என்பதை அனைத்து கடை உரிமையாளர்களிடமும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு தொடர்ந்து நடைபெறும் என வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.