ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மிகக் கொடூரமாக நடந்து கொள்ளும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து, அங்கு பல சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களை தலீபான்கள் தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும், இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில், செய்தி சேகரித்த, பத்திரிகையாளர்கள் இருவரை தலீபான்கள் கடுமையாக தாக்கியதில் அவர்களுக்கு ஏற்பட்ட காயத்தை வெளிக்காட்டும் புகைப்படம் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், இரண்டு நபர்களை தலிபான்கள் தூக்கிலிட்டு கொன்ற, நெஞ்சை பதற வைக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியிருக்கிறது. ஆனால் அந்த வீடியோ எந்த இடத்தில், எப்போது எடுக்கப்பட்டது? கொலை செய்யப்பட்டவர்கள் யார்? என்பது தொடர்பான எந்த தகவலும் வெளியாகவில்லை.
https://twitter.com/MrDawodZai/status/1437685699923296262
அந்த வீடியோவில், பாலைவனம் மாதிரியான ஒரு இடத்தில், கட்டையில் இரு நபர்களை கட்டி தலிபான்கள் தூக்கிலிடுகிறார்கள். இதில் உயிரிழந்த அந்த நபர்களின் உடல்களை, துப்பாக்கியால் சுடுகிறார்கள்.