சீர்காழி அருகே நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 குடிசை வீடுகள் தீயில் எரிந்து கருகியதில் ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பனங்காட்டான்குடி சாலை கோவில்பத்து என்ற இடத்தில் சாலையோரம் சுமார் 10- மேற்பட்டோர் அங்குள்ள குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவ தினத்தன்று அங்கு வசித்து வந்த மூவேந்தன் என்பவரின் வீட்டில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது .இந்த தீ மளமளவென பரவி அருகிலிருந்த சுரேந்திரன் ரோஸ்லின், வள்ளிமயில் மற்றும் தனலட்சுமி ஆகியோரின் வீடுகளுக்கும் பரவி தீப்பிடித்து எரிந்தது .இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு நிலைய அலுவலரான ஜோதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பல மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் .
இந்த விபத்தில் 5 வீடுகளும் தீயில் எரிந்து நாசமானது .அத்துடன் ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான வீட்டு பொருட்கள் எரிந்து சேதமடைந்தது .இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து தகவலறிந்த சீர்காழி திமுக நகர செயலாளர் சுப்புராயன், சீர்காழி மேற்கு ஒன்றிய திமுக பொருளாளர் பிரபாகரன் மற்றும் நகர துணை செயலாளரான பாஸ்கரன் , மாவட்ட விவசாய அணி துணை செயலாளரான முருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு மற்றும் கட்சி சார்பில் விரைவில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.