இளம் பெண் காரில் கடத்தப்பட்ட நான்கு பேர் சேர்ந்து கூட்டாக கற்பழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியானதால் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாதகிரி மாவட்டத்தில், சகாபுரா தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் பெண் டவுனில் இருந்து தனது கிராமத்திற்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் பஸை எதிர்பார்த்து காத்து இருந்தது. அப்போது அங்கு காரில் வந்த 4 பேர் அந்த பெண்ணை கடத்திச் சென்றுள்ளனர். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்று அப்பெண்ணை வைத்து நான்கு பேரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவத்தினை வீடியோவாகவும் எடுத்து உள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் அந்தப் பெண்ணிடமிருந்து 5 ஆயிரம் ரூபாய் படம், ஒரு செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. இந்த சம்பவம் நடந்து கடந்த எட்டு மாதங்கள் இருக்கும். தற்போது இந்த பெண் நிர்வாணப்படுத்தி, துன்புறுத்தப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வீடியோவில் இருந்த 4 பேரையும் கைது செய்துள்ளனர்.