ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியரான ரமா மாஸ்திரி தனது கிராமத்தை இணைக்கும் மூன்று சாலைகளில் 36 ஆண்டுகளாக மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார்.
ஒடிசா மாநிலம், பர்கார் மாவட்டம், கங்கான் கிராமத்தை சேர்ந்தவர் ராமா மாஸ்திரி. இவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். இயற்கையில் அதிக அளவு ஆர்வம் கொண்டவர். அதிக மரங்களை நட வேண்டும் என்பதற்காக தனது சொந்த கிராமத்தை இணைக்கும் மூன்று சாலைகளில் முப்பத்தி ஆறு ஆண்டுகளாக மரங்களை நட்டு அதனைப் பராமரித்து வருகிறார். தற்போது இந்த மூன்றும் சாலைகளும் சோலையாக காட்சி தருகின்றது.
இதற்கு அவர் நட்ட மரங்களே காரணம். அவர் புதிதாக புதிதாக மரங்களை நடுவார். அந்த மரங்களை நடுவது மட்டுமல்லாமல் அதனை முறையாக பராமரிப்பதை தனது முழு நேர பணியாக வைத்துள்ளார். தினமும் மரங்களை நட்டு அதற்கு தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகிறார். இதற்காகவே பல இடங்களில் தண்ணீர் தொட்டியை அமைத்துள்ளார். இவரின் பணியை பலரும் பாராட்டி வருகின்றனர்.