Categories
தேசிய செய்திகள்

பண மோசடி புகார்…. விஜிபி குழும நிர்வாக இயக்குனர் மீது வழக்குப்பதிவு…!!!

விஜிபி குழுமத்தை சேர்ந்த கட்டுமான நிறுவனத்தின், நிர்வாக இயக்குனர் பாபு தாஸ் மீது பண மோசடி புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த கிருஷ்ணா ராவ் என்பவர் விஜிபி குழுமத்தின் கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பாபு தாஸ் மீது புகார் ஒன்றை கொடுத்து இருந்தார். அந்த புகாரில் விஜிபிக்கு சொந்தமான மூன்று சொத்துகளின் ஆவணங்களை அடிப்படையாக வைத்து பிஎன்பி என்ற நிறுவனம் மூலம் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாயை பாபு தாஸ் பெற்றதாக தெரிவித்துள்ளார்.

அதில் 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மட்டுமே திருப்பி கொடுத்துள்ளதாகவும், மீதி பணத்தை திரும்ப தரவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அடமானம் வைத்த சொத்துக்களை முறைகேடாக விற்றதாகவும் கிருஷ்ணராவ் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கடன் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியதாக பாபு தாஸ் பொய்யான புகார் ஒன்றை தன்மீது அளித்திருந்தார். அதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |