Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மொத்தம் 510 கிலோ… போலீசார் அதிரடி சோதனை… குற்றவாளிக்கு வலைவீச்சு…!!

காவல்துறையினர் நடத்திய அதிரடி ரோந்து பணியில் 515 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி உத்தரவின்படி குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் தலைமையில் காவல்துறையினர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனையை தடுக்க அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது ராமநாதபுரம் பகுதியில் பெட்டிகளை அடுக்கி கொண்டு சென்ற ஆட்டோவை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

அப்போது அந்த பெட்டிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்துள்ளது. இதனையடுத்து ஆட்டோ டிரைவர் செந்தில்குமாரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் நேருநகர் மஞ்சன மாரியம்மன் கோவில் தெருவில் பதுக்கி வைக்கபட்டிருந்த 10லட்சம் மதிப்புள்ள 510 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனைதொடர்ந்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து நடத்திய விசாரணையில் ஆர்.எஸ்.மடையை சேர்ந்த திருமுருகன் என்பவர் பல்வேறு மாநிலங்களில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து கேணிக்கரை காவல்துறையினர் செந்தில்குமரை கைது செய்த நிலையில் முக்கிய குற்றவாளியான திருமுருகனை தேடி வருகின்றனர்.

Categories

Tech |