பிரித்தானியா கொரோனா தடுப்பூசி வாங்குவதற்காக பிரான்ஸ் நாட்டு நிறுவனத்துடன் செய்திருந்த ஒப்பந்தமானது ரத்து செய்யப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் valneva என்னும் நிறுவனம் கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்கின்றது. இந்த நிறுவனத்திடம் இருந்து பிரித்தானியா 100 மில்லியன் தடுப்பு மருந்துகளை வாங்குவதாக ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிலையில் விதிமுறைகளை மீறியதாக கூறி அந்த நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை பிரித்தானியா ரத்து செய்துள்ளது. மேலும் எதற்காக இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது என்பது குறித்த விவரங்கள் வெளிவரவில்லை.
இதனால் valneva நிறுவனத்தின் மதிப்புகள் பங்குச்சந்தையில் கடுமையாக சரிந்துள்ளது. அதிலும் இந்த நிறுவனம் ஒரு நேரத்தில் பிரித்தானியாவிற்கு மட்டும் தடுப்பூசிகளை வழங்கி பிரான்ஸ் மற்றும் ஐரோப்பியா நாடுகளுக்கு வழங்காததால் அவர்கள் velneva மீது கோபத்தில் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.