Categories
உலக செய்திகள்

கார் ரேஸ் பார்க்க வந்தவர் கைது…. மூன்று நாள் விசாரணை…. விடுதலை செய்த போலீசார்….!!

கார் பந்தயத்தை பார்க்க வந்தவரை பயங்கரவாத கும்பலில் தலைவன் என்று நினைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

பிரித்தானியாவில் உள்ள லிவர்பூலைச் சேர்ந்த 45 வயதான மார்க் என்பவர் ஹாலந்தில் நடைபெற்ற கார் பந்தயத்தை பார்ப்பதற்காக அங்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவர் கடந்த புதன்கிழமை அன்று ஒரு உணவகத்தில் உணவு உண்ணும் பொழுது திடீரென ஆயுதம் ஏந்திய போலீசார் வந்து அவரின் கண்களை கட்டி  அங்கிருந்து உயர் பாதுகாப்பு அடுக்கு கொண்ட சிறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மேலும் அவரிடம் அங்கு மூன்று நாட்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த விசாரணையில் தவறான நபரை கைது செய்ததாக கூறி மார்க்கை விடுவித்துள்ளனர்.அதாவது மார்க் பார்ப்பதற்கு Matteo Messina Denaro போல் இருந்துள்ளார். அதிலும் Matteo Messina Denaro என்பவர் மாஃபியா கும்பலின் தலைவராவார்.

இவர் 1993 ஆம் ஆண்டு வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளார். அதில் 10 பேர் இறந்துள்ளனர். மேலும் 93 பேர் படுகாயமடைந்தனர். குறிப்பாக மார்க் பார்ப்பதற்கு Matteo இருந்ததால் தான் ஹாலந்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர். அதிலும் கார் பந்தயத்தை பார்ப்பதற்கு தான் வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |