கும்பம் ராசி அன்பர்களே.! மனதில் நிம்மதி இருக்கும்.
இன்று வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாளாக இருக்கும். நீங்கள் கட்டிய வீட்டை பழுது பார்க்க கூடிய எண்ணங்கள் இருக்கும். வாகன பழுது நீக்கம் ஏற்படும். மூத்த சகோதரர் வழியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சகோதர ஒற்றுமை பலப்படும். எதிர்பார்த்த நல்ல பலன் கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் வெற்றி வாய்ப்புகள் இருக்கும். பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் செலவுகள் அதிகரித்தாலும் லாபத்தை உங்களால் ஈட்டிக்கொள்ள முடியும். உங்கள் கீழ் வேலை செய்பவர்களின் செயல்களால் உங்களுக்கு கோபம் உண்டாகும். நிதானமாக பேசுவது நல்லது. இல்லை கொஞ்சம் தள்ளிப் போடுவது நல்லது. பழைய பாக்கிகளை வசூல் செய்யும் போது வேகம் காட்டுவீர்கள். அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்கள் மேலதிகாரிகளிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.. விட்டுக் கொடுத்து சென்றால் எல்லாம் சரியாகும். காதல் விவகாரம் கைக்கூடும்.
கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். மனதில் நிம்மதி இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். செல்வம் சேர்ந்துவிடும். செல்வாக்கு கூடிவிடும். வாழ்க்கை துணை வழியில் உங்களுக்கு முன்னேற்றம் தரக்கூடிய செய்திகள் இருக்கின்றது. அவசர தேவைகள் இருந்தாலும் அதனை அதற்கான பணம் உங்கள் கையில் இருக்கும். காதல் விவகாரங்கள் கண்டிப்பாக மகிழ்ச்சியை கொடுக்கும். காதல் பிரதிகளில் பெரிய பிரச்சினைகள் இருக்காது. காதல் வெற்றியை ஏற்படுத்திக் கொடுக்கும். மாணவர்கள் தைரியமான நாள் துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். மாணவர்கள் இன்று சில முடிவுகளை தெளிவாக செய்ய வேண்டும். அவசரப்பட்டு விட்டால் தோல்வியே மிஞ்சும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 5 அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் மஞ்சள்