Categories
கிரிக்கெட் விளையாட்டு

SL VS SA : ஹென்ரிக்ஸ், டி காக் அசத்தல் ஆட்டம் …. டி20 தொடரை வென்று அசத்திய தென் ஆப்பிரிக்கா …!!!

இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் தென் ஆப்ரிக்கா அணி முழுமையாக கைப்பற்றியது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது .இதில் முதலில்  நடந்த ஒருநாள் தொடரில் இலங்கை அணி 2-1  என்ற கணக்கில் தொடரை வென்றது. இதையடுத்து இரு அணிகளுக்கிடையேயான டி20 தொடரில் தென் ஆப்ரிக்கா அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது .அதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக  குசால் பெராரா 39 ரன்கள் குவித்தார்.

தென் ஆப்ரிக்கா தரப்பில்  ரபடா, பார்ச்சுன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்பிறகு களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஹென்ரிக்ஸ்- டி காக் ஜோடி அரை சதம் அடித்து அசத்தினார் .இறுதியாக தென்ஆப்பிரிக்கா அணி 14.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது .இதில் டி காக் 59 ரன்களும், ஹென்ரிக்ஸ் 56 ரன்களும் குவித்தனர். இதன் மூலமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை தென் ஆப்ரிக்கா அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

Categories

Tech |