வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தேவராயன்பேட்டை கீழத்தெருவில் அன்பழகன்- ராணி என்ற தம்பதினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தங்கதுரை என்ற மகன் இருந்தார். இவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தங்கதுரை தாயார் ராணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரின்படி இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சப்-இன்ஸ்பெக்டர்கள் இளமாறன் போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தங்கதுரையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தங்கதுரை தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.