ஊராட்சி ஒன்றிய தேர்தல் விரைவில் வர இருப்பதால் அதில் ஈடுபடும் அலுவலர்களுக்கு கலெக்டர் பயிற்சி அளித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் ஊரக உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபட இருக்கும் அலுவலர்களுக்கு தேர்தல் வழிபாட்டு நெறிமுறைகள் பற்றி கலெக்டர் விளக்கமாக கூறியுள்ளார்.
இந்நிலையில் இம்மாவட்ட ஊராட்சி அலுவலகத்தின் தேர்தல் முன்னேற்பாடுகளை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு உள்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.