Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஆற்றிலிருந்து மணல் அள்ளுறாங்க…. வசமா சிக்கிய 3 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மணல் அள்ளி விற்பனை செய்வதாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மரூர் கிராமத்தில் பாண்டியன், வினோத்ராஜ் இருவரும் வசித்து வருகின்றனர். இவர்கள் அதே ஊரைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவருக்கு சொந்தமான செங்கல் கால்வாய் குழியிலிருந்து, அரியலூர் மாவட்டம் இலந்தகூடம் கிராமத்தைச் சேர்ந்த குளஞ்சியப்பனுக்கு சொந்தமான ஜே.சி.பி. எந்திரம் மூலம் 2 டிராக்டர்களில் மணல் அள்ளி விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது சட்டவிரோதமாக மணல் அள்ளி விற்பனை செய்வதாக பாண்டியன், வினோத்ராஜ் மற்றும் ஜே.சி.பி. எந்திரம் உரிமையாளர் குளஞ்சியப்பன் ஆகிய 3 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஜே.சி.பி. எந்திரத்தையும், 2 டாக்டர்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

Categories

Tech |