சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி தர்மத்தை காப்பாற்றவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாமக தேர்தலை சந்தித்தது. இதில் அதிமுக கூட்டணியானது தோல்வியை சந்தித்தது. இந்த தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்தது. தற்போது தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இந்த தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். இதில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் இன்றும் நாளையும் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று கூறியுள்ளார்.
மேலும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி தர்மத்தை காப்பாற்றவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். நம்மால் கூட்டணி கட்சிகள் பலன் அடைந்ததே தவிர, அவர்களால் நமக்கு எந்த பலனும் இல்லை. சரியான தலைமை இல்லாததால் அதிமுக தொண்டர்கள் நமக்கு ஒத்துழைப்பு தரவில்லை. இதன்காரணமாக ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து நின்று வென்று நிரூபிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.