Categories
தேசிய செய்திகள்

செப்டம்பர் 15… சர்வதேச பொறியாளர்கள் தினம்… குடியரசுத்துணை தலைவர் வெங்கையா நாயுடு வாழ்த்து…!!!

செப்டம்பர் 15ஆம் தேதியான இன்று தேசிய பொறியாளர் தினம் கொண்டாடப்படுகிறது.

இயற்கை படைப்புகள் இந்த உலகில் எவ்வளவு இருந்தாலும் இன்றைய நவீன உலகத்தின் கண்ணாக இருப்பது பொறியாளர்கள். அவர்களுக்கான ஒரு தினமாக தேசிய பொறியாளர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. பேருந்து , ரயில், விமானம், நாம் உருவாக்கும் சாதனங்கள் கருவிகள் அனைத்திற்கும் காரணகர்த்தாவாக இருப்பது பொறியாளர்கள் தான். இந்தியா வல்லரசாக தற்சார்பு நிலையை நோக்கி நகர பொறியாளர்களின் பங்களிப்பு அளவிட முடியாத ஒன்றாகும்.

நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிகோலாக இருக்கும், அனைவருக்கும் முதன்மை பொறியாளராக இருந்த ஒருவரின் பிறந்த நாளை நமது நாட்டில் பொறியாளர்கள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. அவர்தான் மோக்சகுண்டம் விஸ்வேஸ்வர் ஐயா. சர். எம் பி என்று அன்போடு அழைக்கப்படும் இவர் பிறந்தது கர்நாடகா. புனே பொறியியல் பல்கலைக் கழகத்தில் இன்ஜினியரிங் படிப்பு, பின்னர் மும்பை பொதுத்துறையில் சாதித்து, மத்திய அரசின் நீர்ப்பாசனத் துறையில் நியமிக்கப்பட்ட சாதனை படைத்தவர். ஒரே ஒரு சிப்பில் ஒட்டுமொத்த உலகத்தையும் உட்புகுத்திய புதிய நவீன தொழில்நுட்பத்தின் அசைக்க முடியாத ஆணிவேர்கள் தான் பொறியாளர்கள்.

இந்நிலையே சர்வதேச பொறியாளர்கள் தினத்தை முன்னிட்டு இந்தியாவின் குடியரசுத்துணை தலைவர் வெங்கையா நாயுடு அனைத்து பொறியாளர்களுக்கும் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |