Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிணற்றில் மிதந்த 4 வயது குழந்தை…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்….!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஸ்தந்தம் திருவள்ளூர் நகரில் வசித்து வருபவர் பார்த்திபன்(30). இவர் அங்குள்ள பட்டாசு ஆலை ஒன்றில் ஒட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கவியரசி என்ற மனைவியும் பிரியதர்ஷன்(8) தீனதயாளன் (4) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் பார்த்திபன் தனது இரண்டாவது மகன் தீனதயாளனை நேற்று முன்தினம் அதே பகுதியை சார்ந்த தனது தாயார் லட்சுமி  வீட்டில் விட்டுவிட்டு வீடு திரும்பினார்.

அதன் பிறகு சிறுவன் வீட்டின் முன்பு அதே பகுதியை சேர்ந்த சில சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். இதனையடுத்து மாலை 4 மணி அளவில் சிறுவன் தீனதயாளனை திடீரென காணவில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த பாட்டி லட்சுமி, தனது மகன் பார்த்திபனுக்கு தகவலை கூறியுள்ளார் . அதன்பிறகு இந்த சம்பவத்தை பற்றி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் மாயமான சிறுவனுடன் விளையாடிய அதே பகுதியை சேர்ந்த 13,11 வயது சிறுவர் இருவரை  சந்தேகத்தின் பெயரில் விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில் சிறுவனை அதே பகுதியில் உள்ள கிணற்றில் தள்ளி விட்டோம் என்று சிறுவர்கள் கூறியது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு கிணற்றில் தேடினார்கள்.

ஆனால் போதிய வெளிச்சம் இல்லாததால் தேடும் பணி தோல்வியில் முடிந்தது. நேற்று மாலை 6 மணியளவில் சிறுவனின் உடல் கிணற்றில்  மிதந்தது. அதனை   தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 2 சிறுவர்களை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |