மேற்கத்திய ராணுவ படையினர்களுடன் ஒன்றாக சேர்ந்து பணிபுரிந்தவர்களை தேடித்தேடி பழிவாங்கும் தலிபான்கள் ஆப்கன் நாட்டைச் சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரர் ஒருவரை 3 முறை நெஞ்சில் சுட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான் பயங்கரவாதிகள் மேற்கத்திய ராணுவ படையினர்களுடன் ஒன்றாக சேர்ந்து பணிபுரிந்த ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள வீரர்களை தேடி தேடி சென்று பழி வாங்குகிறார்கள். இதற்கிடையே cf333 என்னும் ராணுவ குழுவைச் சேர்ந்த நூர் என்னும் நபர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்களால் துப்பாக்கி சுடுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள் சிஎப் 333 என்னும் குழுவைச் சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரரான நூரை தேடி சென்று அவர்களது குடும்பத்தின் கண்முன்னே நெஞ்சில் 3 முறை சரமாரியாக சுட்டு கொன்றுள்ளார்கள்.
இதனையடுத்து நூர் என்ன தவறு செய்தார் என்று தலிபான்கள் அவரை சுட்டுக் கொன்றுள்ளார்கள் என முன்னாள் படைத் தலைவர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதோடு மட்டுமின்றி தலிபான்கள் இங்கிலாந்து படைவீரர்களால் பயிற்சி அளிக்கப்பட்ட நூரை சுட்டுக்கொன்றது ஒரு விளையாட்டு அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.