குஜராத் மாநிலத்தில் தொற்று அதிகமாக உள்ள 10 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தொற்று தீவிரமாக பரவி வந்தது. முதல் அலையில் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. அதே போன்று குஜராத் மாநிலத்திலும் கொரோனா முதல் அலை காரணமாக பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் இரண்டாவது அலையில் அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டது. பிறகு தற்போதுதான் எண்ணிக்கை குறைந்து நிலமை சீரடைய தொடங்கியுள்ளது. அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக தொற்று லேசாக அதிகரித்து வருகின்றது.
இதனால் குஜராத் மாநிலத்தில் வதோரா, காந்திநகர், சூரத், ராஜ்கோட் உள்ளிட்ட 10 நகரங்களில் வரும் 15ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று குஜராத் அரசு தெரிவித்துள்ளது. மேலும் அம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது தொற்றிலிருந்து 17 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 165 ஆக உள்ளது.