சென்னை மாவட்டம் திருவிக நகர், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த அசோகன் என்பவருடைய மகள் காவியா. இவர் பெரம்பலூரில் 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று காவியாவுக்கும், அவருடைய தம்பிக்கும் லேசான சண்டை ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த பெற்றோர் இருவரையும் சமாதானம் செய்து விட்டு வெளியே சென்றுள்ளனர்.
இதனையடுத்து சண்டையின் காரணமாக மனமுடைந்த காவியா, வீட்டில் தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த காவியாவின் தம்பி அதிர்ச்சியடைந்து, தனது பெற்றோர்களை வரவழைத்து உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், காவியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து திருவிக நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.