Categories
அரசியல்

“விலகிய பாமக” அவங்க இஷ்டம்…. ஆனா நாங்க சும்மா இருக்க மாட்டோம்…. கொதித்த ஜெயக்குமார்…!!!

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக பாமக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், அதிமுகவிலிருந்து பாமக விலகுவதாக கூறியது. மேலும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்து நின்று வாக்கு சதவீதத்தை நிரூபிப்போம் என்று தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எங்களுடைய கூட்டணியில் நீடிக்கலாமா? வேண்டாமா? என்பதை அவர்கள் முடிவு எடுத்துக் கொள்ளட்டும்.

யாருடைய கட்டாயத்தின் அடிப்படையில் அவர்கள் இந்த முடிவு எடுத்தார்கள் என்பது எங்களுக்கு தெரியாது. அது அவர்களுடைய விருப்பம். அதனை நாங்கள் விமர்சனம் செய்யவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதினால் அவர்களுக்கு தான் இழப்பு. இதனால் எங்களுக்கு எந்த இழப்பும் கிடையாது. அதற்காக எங்கள் கட்சியை விமர்சனம் செய்வதை எந்த விதத்திலும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறு விமர்சனம் செய்யும் நிலை தொடர்ந்தால், நாங்களும் விமர்சனம் செய்ய வேண்டிய நிலை வரும். அதிமுகவை பொறுத்தவரை கடந்த பத்து வருட ஆட்சிக் காலத்தில் எத்தனையோ நன்மைகளை தமிழக மக்களுக்காக செய்து இருக்கிறோம். ஆனால் திமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்து விட்டு, தற்போது எதையும் நிறைவேற்ற முடியாமல் தவித்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |