ஈரான் நாட்டின் சுகாதாரத்துறை ஒரே நாளில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பாதிப்பு தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை விரட்டியடிக்கும் அனைத்து நாடுகளும் தங்களால் இயன்ற முயற்சிகளை எடுத்து வருகிறது. இருப்பினும் கொரோனா வைரஸ் உருமாறி அனைத்து நாடுகளிலும் பல சிக்கலை உருவாக்கி வருகிறது.
இவ்வாறான சூழ்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் ஈரான் நாட்டின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
அதாவது ஒரே நாளில் ஈரான் நாட்டில் கொரோனா பெருந்தொற்றால் சுமார் 22,329 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதோடு மட்டுமின்றி ஒரே நாளில் ஈரான் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 408 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்கள்.