Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கற்களை வைத்து விளையாட்டா….? தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கிரிக்கெட் விளையாடிவிட்டு சிறுவர்கள் இரயில் தண்டவாளத்தில் பெரிய கல்லை வைத்துவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு பகுதியிலிருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் இரயில் ஒன்று இயக்கப்படுகிறது. இந்த இரயில் திண்டுக்கல்லில் உள்ள பாலகிருஷ்ணாபுரம் – அனுமந்தநகர் பகுதிக்கு அருகில் வந்து கொண்டிருந்த போது, இரயிலின் குளிர்சாதன பெட்டியில் ஏதோ ஒன்று உரசுவது போல எஞ்சின் டிரைவருக்கு தெரிந்துள்ளது. எனவே இன்ஜின் டிரைவர் பிரேக்கினை அழுத்தி இரயிலினை நிறுத்திவிட்டு கீழே இறங்கி பார்துள்ளார். அப்போது தண்டவாளத்தில்  பெரிய கற்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து இஞ்சின் டிரைவர் இரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் தண்டவாளத்தில் இருந்த கற்களை அகற்றிவிட்டு விசாரணை நடத்தியுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறுவர்கள் ஸ்டெம்புக்கு பதிலாக தண்டவாளத்தில் கற்களை வைத்து கிரிக்கெட் விளையாடி சென்றது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் நடந்த போது இஞ்சின் டிரைவர் இரயிலை மெதுவாக இயக்கிய காரணத்தால் பெரிய விபத்து தவிர்க்கபட்டுள்ளது. மேலும் காவல்துறையினர் தண்டவாளத்தில் கற்களை வைத்துவிட்டு சென்ற சிறுவர்களை  தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |