பாண்டியன் ஸ்டோர் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மிக முக்கிய கதாபாத்திரமான அம்மா லக்ஷ்மி அவர்கள் இறந்து விடுகிறார்கள். சீரியலில் நடந்த இந்த மரணச் செய்தியால் குடும்பத்தில் பெரும் சோகத்தில் உள்ளனர்.
இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இதனை பார்க்கும்போது அண்ணன் தம்பி அனைவரும் அவர்களின் அம்மாவின் இறுதி சடங்கிற்காக வந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. ஆனால் இந்த புகைப்படத்தில் கண்ணன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.instagram.com/p/CTzfBvjB91b/?utm_source=ig_embed&ig_rid=9e4f4ad2-4026-40cb-a400-6ebe1e369cc9