தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி முதல் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய கூடும் .அதன்படி நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சென்னையில் ஆங்காங்கே மிதமான மழை பெய்யக்கூடும்.தமிழகத்தில் வருகின்ற 18ம் தேதி முதல் மழை பெய்ய இருப்பதால் தென்மேற்கு அரபிக் கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.