ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள மீதமுள்ள ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி வீரர் டூ பிளசிஸ் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது .
14-வது ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் வருகின்ற 19-ஆம் தேதி மீது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது .இதில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன .இந்நிலையில் சிஎஸ்கே அணியில் முக்கிய வீரர்கள் முதல் சில போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதில் தென்னாபிரிக்க வீரனான டூ பிளசிஸ் தற்போது சிபில் தொடரில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் .
ஆனால் போட்டியின் போது இவருக்கு காயம் ஏற்பட்டதால் அவர் அரையிறுதியில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை முதல் போட்டி தொடங்கவுள்ள நிலையில்,டூ பிளசிஸ்-க்கு காயம் ஏற்பட்டிருப்பது சிஎஸ்கே அணிக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது .இதற்கிடையே இங்கிலாந்து வீரரான சாம் கரண் இதுவரை துபாய்க்கு வந்த அடையாததால் அவரும் முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.