ஜப்பானின் பொருளாதார மண்டலத்தை குறிவைத்து ஏவுகணைகள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தென் கொரியாவில் உள்ள முக்கிய அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் “ஜப்பானின் முக்கியமான பொருளாதார மண்டலத்தை குறிவைத்து வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை அனுப்பியுள்ளது. மேலும் உள்ளூர் நேரப்படி 12.43 மணியளவில் மற்றொரு ஏவுகணையும் ஏவப்பட்டுள்ளது. ஆனால் இந்த இரண்டாவது ஏவுகணை தாக்கிய தளத்தை அடையாளம் காண இயலவில்லை” என்று தென்கொரியாவின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கு முன்னதாக செப்டம்பர் 13 ஆம் தேதியன்று வடகொரியாவின் கப்பல் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டது என்று அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்த ஏவுகணைகள் சுமார் 1500 கிலோமீட்டர் வரை சென்று இலக்குகளை தாக்கும் திறன் உடையவை என்றும் தெரிவிக்கப்பட்டது. அதிலும் அரசு செய்தி நிறுவனத்தின் அறிக்கைக்கு பிறகு வடகொரியாவின் ஏவுகணை சோதனை வெற்றி குறித்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சரான Nobuo Kishi தகவல் ஒன்றை வெளியிட்டார். அதில் “இது நாட்டின் உள்ள பல பகுதிகளில் அமைதி மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தும் விதமாக அமைந்துள்ளது” என்று கூறியுள்ளார்.