Categories
தேசிய செய்திகள்

திருப்பதி கோபுரத்தில் செய்யப்பட்ட மாற்றம்…. சர்ப்ரைஸ் கொடுக்கும் தேவஸ்தானம்…!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் நாள்தோறும் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது கொரோனா தொற்று குறைந்து கொண்டே வருவதால் இலவச தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் தினசரி 2000 டோக்கன்கள் சித்தூர் மாவட்டம் பக்தர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றது. இதனால் பிற மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். இதற்கு விளக்கம் அளித்த தேவஸ்தான நிர்வாகம் வேறு மாவட்டங்கள் மாநிலங்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

திருமலையில் உள்ள விமான கோபுரமானது தங்கம் முலாம் கொண்டு பூசப்பட்டுள்ளதால், வெகு தூரத்தில் இருந்தும் மின்னக்கூடியது. இதற்கு முன்னதாக 1976 ஆம் ஆண்டு இந்த பணி நடைபெற்றது. அதற்குப் பின்னர் ஆக 2018 ஆம் ஆண்டு ஏழுமலையான் கோயிலை புதுப்பிப்பதற்கு தேவஸ்தானம் முடிவு செய்து 100 கிலோ தங்கமும் 4300 கிலோ காப்பர் என 32 கோடி ரூபாய் செலவில் திட்டமிட்டு இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு மத்தியில் இந்த பணி நிறைவு பெறும், இதனால் சாமி தரிசனம் செய்வதற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |