பூட்டை உடைத்து நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள களஞ்சேரி ஆற்றங்கரை தெருவில் தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகலூர் கடை வீதியில் நகைக்கடை ஒன்று நடத்திய வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் தனசேகரன் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து தனசேகரன் மறுநாள் காலை வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அதன்பின் தனசேகரன் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த 6 1/2 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து தனசேகரன் கொடுத்த புகாரின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடயங்களை சேகரித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா தலைமையில் தனிப்படை காவல்துறையினர் நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.