தேசிய தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து பிரித்தானியா மகாராணியார் அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
பிரித்தானியா மகாராணியார் வடகொரியாவின் 73-வது தேசிய தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றை அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு அனுப்பியுள்ளார். இது அந்நாட்டின் தேசிய தின விழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக செப்டம்பர் 7 ஆம் தேதி கிடைக்கப்பட்டதாக வட கொரியா ஊடகம் தெரிவித்துள்ளது. அதில் “வடகொரியா குடியரசின் மக்கள் தங்கள் தேசிய தினத்தை கொண்டாட உள்ளனர். அவர்களின் வருங்காலம் சிறப்பாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.
ஆனால் இந்த வாழ்த்து கடிதம் குறித்து பிரிட்டிஷ் செய்தி ஊடகங்கள் மற்றும் பக்கிங்ஹாம் அரண்மனையின் இணையதளத்திலும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் மகாராணியார் இது மாதிரியான வாழ்த்து செய்திகளை அனுப்புவார் என்றும் தகவல் தெரிய வந்துள்ளது. அதிலும் மகாராணியார் அனுப்பிய செய்தியை வெளியிடுவது இதுவே முதல் தடவையாகும். குறிப்பாக வெளியுறவுத்துறை அலுவலகம் வாயிலாக மகாராணியார் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார் என்பதை பக்கிங்ஹாம் அரண்மனை உறுதி செய்துள்ளது.