தொலைத்தொடர்பு துறையில் அந்நிய நேரடி முதலீட்டின் உச்சவரம்பை மத்திய அரசு அதிகரித்துள்ளது. தானியங்கு முறையிலான அந்நிய நேரடி முதலீட்டு வரம்பினை 49 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்திற்கு இன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதுதொடர்பாக மத்திய தகவல் தொடர்புத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறும்போது, தொலைதொடர்பு துறையில் தானியங்கி முறை மூலமாக 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் இதற்கு பொருந்தும். எதிர்கால இடங்களை பொறுத்தவரையில் அலைக்கற்றை உரிமம் 20 வருடங்களுக்கு பதிலாக 30 வருடங்களாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Categories