குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள காவனூர் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் பாக்கியராஜ் என்பவரும் வசித்து வருகிறார். அதன்பின் உறவினர்களான இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து போர்வெல் போடும் நிறுவனத்தில் சுண்ணாம்பு காளவாசல் பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது இரவு நேரத்தில் அறையில் தூங்கிக் கொண்டிருக்கும் போது குடிபோதையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட காரணத்தினால் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர்.
பிறகு இரண்டு பேரும் தூங்குவதற்காக சென்றுள்ளனர். இதனை அடுத்து நள்ளிரவில் தூக்கக்கலக்கத்தில் எழுந்த பாக்கியராஜ் இரும்பு குழாயை எடுத்து கோவிந்தராஜ அடித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே கோவிந்தராஜ் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து காலையில் வேலைக்கு சென்ற சக தொழிலாளர்கள் கோவிந்தராஜ் வராததை அறிந்து அவரை தேடி அறைக்கு சென்றுள்ளனர். அப்போது அறையில் அவர் கொலை செய்யப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட கோவிந்தராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் குடிபோதையில் பாக்கியராஜ் தனது உறவினரை அடித்துக் கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனால் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.