விவசாயியை அரிவாளால் வெட்டியவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணிமுத்தாறு பகுதியில் கந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் கருப்பாயி முருகன் என்பவர் குடிபோதையில் கந்தனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்த கந்தனின் மகன் விவசாயியான முருகன் என்பவர் தட்டிக் கேட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த கருப்பாயி முருகன் முருகனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த முருகன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த கல்லிடைக்குறிச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கருப்பையா முருகனை தேடி வருகின்றனர்.