Categories
சினிமா தமிழ் சினிமா

குழந்தைகளின் திரில்லர் திரைப்படம்… முக்கிய நாயகனாக சார்பட்டா பரம்பரை நடிகர்…!!!

குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் திரில்லர் திரைப்படம் கூடிய விரைவில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சுனில் டிக்சன் இயக்கத்தில் ஷாடோ லைட் என்டர்டைன்மென்ட் வழங்கும் திரைப்படம் தூநேறி. தூநேறி என்பது ஊட்டி அருகில் இருக்கும் ஒரு ஊரின் பெயர் ஆகும். இப்படத்தில் கதாநாயகனாக நிவின் கார்த்திக்கும் கதாநாயகியாக மியா ஸ்ரீயும் நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் முக்கிய நாயகனாக சார்பட்டா பரம்பரை புகழ் டாடி ஜான் விஜய் நடித்துள்ளார்.

குழந்தைகளை மையமாக வைத்து திரில்லர் பாணியில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக இப்படத்தின் இயக்குனர் சுனில் டிக்சன் தெரிவித்துள்ளார். குறிப்பாக இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, திருவனந்தபுரம், சென்னை உள்ளிட்ட இடங்களில் 70 நாட்களாக நடைபெற்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி இருக்கும் நிலையில் கூடிய விரைவில் இத்திரைப்படம் வெள்ளித்திரையில் வெளியாக தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது.

Categories

Tech |