வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சௌந்தர்யா என்ற மாணவி நீட் தோல்வி பயத்தால் என்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வை சரியாக எழுதவில்லை என்று மாணவி விரக்தியில் இருந்ததாகவும், மதிப்பெண் குறையும் என்ற அச்சத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர்கள் கூறியுள்ளனர். ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேலம் மாவட்டத்தை சேர்ந்த தனுஷ் என்ற மாணவன் நீட்தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். நேற்று அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் நீட் தோல்வி பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இதையடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், மாணவ செல்வங்களே! மனம் தளராதீர்கள்! கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள்! கல் நெஞ்சம் கொண்டோரை கரைப்போம்! நீட் எனும் அநீதியை ஒழிக்கும் வரை நாம் ஓயமாட்டோம்! என்று தற்கொலை தடுப்பு குறித்தும் நீட் விலக்கு குறித்தும் முதல்வர் ஸ்டாலின் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
மாணவச் செல்வங்களே! மனம்தளராதீர்கள்!
கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்; ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள்!
கல் நெஞ்சங்கொண்டோரைக் கரைப்போம்!#NEET எனும் அநீதியை ஒழிக்கும்வரை நாம் ஓயமாட்டோம்! https://t.co/sE6530aZR7
— M.K.Stalin (@mkstalin) September 15, 2021